Headphone போட்டு தூங்கினால் ஆபத்தா? காதுகளை பாதுகாக்க எச்சரிக்கை!

Headphone போட்டு தூங்கினால் ஆபத்தா? காதுகளை பாதுகாக்க எச்சரிக்கை!

தூங்கும் போது காதில் ஹெட்ஃபோன் பயன்படுத்துவது பல சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிக ஒலியில் நீண்ட நேரம் இசையைக் கேட்பதால் காது கேட்கும் திறன் படிப்படியாகக் குறைவதுடன், நிரந்தர செவித்திறன் இழப்புக்கும் வழிவகுக்கலாம். அதோடு, அதிக நேரம் ஹெட்ஃபோன் பயன்படுத்தினால் காதின் உட்புறத்தில் இயற்கையான ஈரப்பதம் பராமரிக்கப்படாது.

ஹெட்ஃபோனின் இயர் பட்ஸ்ஸில் பாக்டீரியாக்கள் உருவாகி காதின் உட்புறத்தில் பரவி, தொற்றுநோயை (Infection) ஏற்படுத்தலாம். மேலும், நீண்ட நேரம் ஹெட்ஃபோன் அணிந்திருப்பதால் காது குரும்பி (Ear Wax) வெளியேறுவது தடுக்கப்பட்டு, அது காதின் உட்புறத்தில் தள்ளப்படுகிறது. இதனால் காதில் நோய்த்தொற்று அல்லது கேட்கும் திறன் குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, இந்த சுகாதார அபாயங்களைத் தவிர்க்க, ஹெட்ஃபோன் அணிந்து தூங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *