இலங்கையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய இந்தியா அதிரடி உதவி

நெருக்கடியான சூழலில் அண்டை நாடான இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியா 38 ஆயிரம் டன் எரிபொருளை வழங்கியுள்ளது. இதில் 20 ஆயிரம் டன் டீசல் மற்றும் 18 ஆயிரம் டன் பெட்ரோல் அடங்கும் என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த உடனடி நடவடிக்கை இலங்கையின் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க பெரிதும் உதவும். ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வருகிறது. இந்த எரிபொருள் விநியோகம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதுடன், இலங்கையின் பொருளாதாரச் செயல்பாடுகள் தடையின்றி நடைபெறவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.