இந்திய நேபாள உறவில் புதிய திருப்பம் மோடிக்கு பாலேந்திர ஷா நெகிழ்ச்சியான பதில்
March 28, 2026

ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு நேபாள பிரதமர் அலுவலகம் தனது முதல் சமூக வலைதளப் பதிவை வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை மேம்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளார். மக்களின் முன்னேற்றத்திற்காக இந்தியாவுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பாலேந்திர ஷா நேபாள பிரதமராகப் பொறுப்பேற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். நேபாள மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள புதிய தலைமையுடன் இணைந்து, இரு நாட்டு உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்தியா ஆர்வமாக உள்ளதாக மோடி பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாகவே நேபாளத்தின் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.