மிசிசிப்பியில் வேன் மீது சரக்கு ரயில் மோதி கோர விபத்து 5 பேர் உயிரிழந்த சோகம்

மிசிசிப்பியில் வேன் மீது சரக்கு ரயில் மோதி கோர விபத்து 5 பேர் உயிரிழந்த சோகம்

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள விக்கின்ஸ் பகுதியில் சரக்கு ரயில் ஒன்று வேன் மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேனில் பயணம் செய்த 23 வயது பெண் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரயிலில் இருந்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து உள்ளூர் காவல்துறையினர் மற்றும் ரயில்வே நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரயில்வே நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *