தேர்தல் களத்தில் ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை போட்டியிடப் போவதில்லை என அதிரடி முடிவு

தேர்தல் களத்தில் ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை போட்டியிடப் போவதில்லை என அதிரடி முடிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான மோதல் வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கடுமையான நிபந்தனைகளால், அண்ணாமலைக்கு அவர் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக, இந்தத் தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என அண்ணாமலை பாஜக மேலிடத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த காலங்களில் அதிமுகவை அண்ணாமலை கடுமையாக விமர்சித்தது கூட்டணிக்குள் விரிசலை உண்டாக்கியிருந்தது. தற்போது மீண்டும் கூட்டணி அமைந்தாலும், அண்ணாமலையின் செல்வாக்கை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி காய்நகர்த்தியதாகக் கூறப்படுகிறது. கோவை உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் மறுக்கப்பட்டதால், ஒருகாலத்தில் நட்சத்திர வேட்பாளராக இருந்த அண்ணாமலை தற்போது அரசியல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். இது அவருடைய அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *