பிரதமர் மோடியின் வருகையால் கோவையில் டிரோன்கள் பறக்க அதிரடி தடை விதிப்பு

பிரதமர் மோடியின் வருகையால் கோவையில் டிரோன்கள் பறக்க அதிரடி தடை விதிப்பு

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்காகப் பிரதமர் நரேந்திர மோடி நாளை கேரளம் வருகை தருகிறார். பாலக்காடு மற்றும் திருச்சூர் பகுதிகளில் பாஜாக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். இதற்காக நாளை மதியம் கோவை வரும் அவர், அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கேரளம் செல்லத் திட்டமிட்டுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காகக் கோவையின் நீலாம்பூர், எட்டிமடை, அவினாசி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்கக் காவல்துறை தடை விதித்துள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டுப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *