ஈரானின் அணுசக்தி ஜாக்கெட் அமெரிக்காவிற்கு புதிய அச்சுறுத்தல்

ஈரானின் அணுசக்தி ஜாக்கெட் அமெரிக்காவிற்கு புதிய அச்சுறுத்தல்

ஈரான் ‘நியூக்ளியர் ஜாக்கெட்’ எனப்படும் சிறிய ரக அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ் எச்சரித்துள்ளார். தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய இந்த நுட்பமான ஆயுதம், ஏவுகணைகளை விட ஆபத்தானது. இதன் மூலம் மக்கள் நடமாட்டம் மிகுந்த நகரங்களில் ஊடுருவி பேரழிவை ஏற்படுத்த முடியும் என அமெரிக்க உளவுத்துறை அஞ்சுகிறது.

தற்போது ஈரானிடம் 60 சதவீதத்திற்கும் மேலாக சுத்திகரிக்கப்பட்ட யூரேனியம் அதிகளவில் உள்ளது. சர்வதேச ஒப்பந்தங்களிலிருந்து விலகி, இந்த இருப்புக்களைக் கொண்டு ஈரான் விரைவில் பல அணு குண்டுகளை தயாரிக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த புதிய தொழில்நுட்ப வளர்ச்சி உலகளாவிய பாதுகாப்பு அமைப்புகளுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *