தேர்தலில் தோற்றால் இந்தியாவை விட்டே வெளியேறுவேன் என பாஜக வேட்பாளர் ஜான்குமார் அதிரடி
March 27, 2026

புதுச்சேரி பாஜக வேட்பாளர் ஜான்குமார், தான் இந்தத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் நாட்டை விட்டே சென்று விடுவதாக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். தொகுதி விற்பனை தொடர்பான திமுக வேட்பாளரின் புகார்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் உண்மையை வெளிப்படுத்தும் என்று சவால் விடுத்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் பேசுகையில், கொள்கையற்ற இந்தியா கூட்டணி புதுச்சேரியில் குழப்பத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். ஏப்ரல் 3-ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வரவுள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமி தனது தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருவார் என்றும் ஜான்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.