தாய் வீடு மற்றும் புகுந்த வீடு என இரண்டு கூட்டணிகளிலும் சீதனம் பெற்ற ஏ சி சண்முகம்
March 27, 2026

புதிய நீதிக்கட்சிக்கு என்டிஏ கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ஏ சி சண்முகம் தெரிவித்துள்ளார். இதில் அதிமுக சார்பில் ஒரு தொகுதியும், பாஜக சார்பில் ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தனது தாய் வீடு மற்றும் புகுந்த வீடு கொடுத்த சீதனமாக அவர் நெகிழ்ச்சியுடன் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
இந்தத் தேர்தலில் ஏ சி சண்முகம் போட்டியிட வாய்ப்பில்லை என்றும், அவருக்குப் பதிலாக கணேசன் என்பவர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு பெரிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளதால் தேர்தல் களத்தில் புதிய நீதிக்கட்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.