வெள்ளை மாளிகையின் மர்ம வீடியோக்களால் பரபரப்பு நாளை வெளியாகப்போகும் அந்த முக்கிய அறிவிப்பு என்ன

வெள்ளை மாளிகையின் மர்ம வீடியோக்களால் பரபரப்பு நாளை வெளியாகப்போகும் அந்த முக்கிய அறிவிப்பு என்ன

அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியான மர்மமான வீடியோக்கள் உலகெங்கும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. மர்ம எமோஜிகள் மற்றும் தெளிவற்ற ஆடியோக்கள் கொண்ட இந்த பதிவுகளில் “நாளை ஒரு முக்கிய அறிவிப்பு வரும்” என்று மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த வீடியோக்கள் நீக்கப்பட்டாலும், அதற்குள் அவை இணையத்தில் தீயாய் பரவி டிரம்ப் தரப்பின் அடுத்தகட்ட நகர்வு குறித்த யூகங்களை அதிகரித்துள்ளன.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடிக்கும் சூழலில் இந்த மர்ம வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ஈரான் தரப்பு பேச்சுவார்த்தையை மறுத்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதி குறித்து பேசி வருகிறார். ஒருபுறம் சமாதான பேச்சுவார்த்தை என கூறிக்கொண்டே மறுபுறம் மத்திய கிழக்கில் அமெரிக்க படைகளை குவித்து வருவது டிரம்பின் திட்டங்கள் குறித்த மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *