திருமணமான ஆணின் லிவ்-இன் உறவு குற்றமல்ல என அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருமணமான ஆணின் லிவ்-இன் உறவு குற்றமல்ல என அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருமணமான ஒரு ஆண் மற்றொரு வயது வந்த பெண்ணுடன் பரஸ்பர சம்மதத்துடன் லிவ்-இன் உறவில் இருப்பது சட்டப்படி குற்றமல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமூக ஒழுக்கம் அல்லது அறநெறிகள் சட்டத்திற்கு மேலானவை அல்ல என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஷாஜஹான்பூரைச் சேர்ந்த ஒரு ஜோடிக்கு குடும்பத்தினரிடமிருந்து வரும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு வழங்க காவல்துறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரஸ்பர சம்மதத்துடன் வாழும் இரண்டு வயது வந்த நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது காவல்துறையின் கடமை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. கௌரவக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஜோடி மீதான கடத்தல் வழக்கில் கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானது எனத் தெரிவித்த நீதிமன்றம், குடும்பத்தினர் அவர்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கக் கூடாது என ஆணையிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *