பெட்ரோல் டீசல் வரி குறைந்தும் விலை குறையாதது ஏன் தெரியுமா பின்னணியில் உள்ள மர்மம்
March 27, 2026

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இருப்பினும் எண்ணெய் நிறுவனங்களின் கூடுதல் உற்பத்தி செலவை ஈடுகட்டவும் நஷ்டத்தைத் தவிர்க்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே சில்லறை விற்பனை விலையில் உடனடி மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் வேளையில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி சந்தையை நிலைநிறுத்த அரசு முயல்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை மறுத்துள்ள அமைச்சகம் போதிய கையிருப்பு உள்ளதாக உறுதி அளித்துள்ளது. இந்த வரிக்குறைப்பு விலையை குறைக்காமல் மேலும் உயராமல் தடுக்கவே உதவும்.