சிவபெருமானின் அவதாரம் என்று கூறி பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார்
March 27, 2026

ஆன்மீக குரு என்று கூறி புனேவைச் சேர்ந்த பெண் ஒருவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ரிஷிகேஷ் வைத்யா என்பவர் மீது புகார் எழுந்துள்ளது. தன்னை சிவபெருமான் என்றும் அந்தப் பெண்ணைப் பார்வதி என்றும் கூறி, ஆபாசப் படங்களை எடுத்து பிளாக்மெயில் செய்துள்ளான். கடந்த ஆண்டு முகநூல் மூலம் பழகி இந்தத் துரோகத்தைச் செய்த அந்தப் போலி சாமியார் தற்போது தலைமறைவாக உள்ளார்.
நாசிக்கில் மற்றொரு போலி சாமியார் கைதான செய்தியைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக மாணிக்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவம் புனேவில் நடந்ததால், போலீசார் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்து வழக்கை ஹடப்சர் காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். குற்றவாளியைத் தேடி வரும் போலீசார், அவனது அமைப்பின் பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.