ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது ஈரான் அதிரடி தாக்குதல்
March 27, 2026

சர்வதேச கடல் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த மார்ஷல் தீவுகளின் சரக்கு கப்பல் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பகுதியில் ஈரானின் இத்தகைய நடவடிக்கை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது உலக வர்த்தக விநியோக சங்கிலியை கடுமையாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த கடல் வழியாக இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. ஸ்பெயின் நாடு முன்னதாக கோரிக்கை வைத்தால் மட்டுமே அனுமதி பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து இந்த வழியாக நடப்பதால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்வினை குறித்து உலக நாடுகள் உற்று நோக்குகின்றன.