திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு மீதமுள்ள இடங்களில் இழுபறி நீடிப்பு
March 27, 2026

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 28 இடங்களில் முதற்கட்டமாக 16 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வேளச்சேரி, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் உதகை உள்ளிட்ட கடந்த முறை வெற்றி பெற்ற முக்கிய தொகுதிகள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கடந்த முறை வென்ற இடங்களை தக்கவைத்துக் கொள்வதில் காங்கிரஸ் வெற்றி கண்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள 12 தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இரு கட்சிகளிடையே இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. குறிப்பாக தென் மாவட்டங்களில் சில தொகுதிகளை பரிமாறிக்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நீடிப்பதால் சிறிய அளவிலான இழுபறி நிலவுகிறது. இந்தப் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.