ரயில் பயணிகளுக்கு தென்னக ரயில்வேயின் புதிய கட்டுப்பாடு மிடில் பெர்த் பயன்படுத்த இனி காலக்கெடு

ரயில் பயணிகளுக்கு தென்னக ரயில்வேயின் புதிய கட்டுப்பாடு மிடில் பெர்த் பயன்படுத்த இனி காலக்கெடு

ரயில்களில் பயணம் செய்யும் போது நடுப்படுக்கை அல்லது மிடில் பெர்த் பயன்படுத்துவது தொடர்பாக தென்னக ரயில்வே புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இந்த படுக்கையை தூங்குவதற்கு பயன்படுத்த முடியும். மற்ற நேரங்களில் சக பயணிகள் அமர்வதற்கு ஏதுவாக படுக்கையை மடித்து வைக்க வேண்டியது கட்டாயமாகும்.

முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டும் இந்த நேரத்தில் விலக்கு அளிக்கப்படும். மற்ற பயணிகள் இந்த விதிமுறையை மீறி சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் டிக்கெட் பரிசோதகர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *