மீண்டும் சிவகாசி களத்தில் ராஜேந்திர பாலாஜி வெற்றி வாய்ப்பு யாருக்கு
March 27, 2026

அதிமுக கோட்டையான சிவகாசியில் இருமுறை வென்று அமைச்சராக இருந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி, கடந்த தேர்தலில் ராஜபாளையத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் தனது சொந்த தொகுதியான சிவகாசியிலேயே போட்டியிடுவார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோல்விக்கு பின் சிவகாசி பக்கம் கவனம் செலுத்திய ராஜேந்திர பாலாஜி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி மக்கள் செல்வாக்கை மீட்க முயன்று வருகிறார். பழைய கசப்புகளை மறந்து சொந்த தொகுதியே கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அவர் களம் காண்கிறார். இந்த முறை சிவகாசி மக்கள் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.