ஹிரோஷிமாவின் சுவர்களில் இன்றும் அழியாத மனித நிழல்கள்

ஹிரோஷிமாவின் சுவர்களில் இன்றும் அழியாத மனித நிழல்கள்

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட ‘லிட்டில் பாய்’ மற்றும் ‘ஃபேட் மேன்’ அணுகுண்டுகள் ஏற்படுத்திய பாதிப்பு 85 ஆண்டுகள் கடந்தும் அழியாத வடுக்களாக உள்ளன. வெடிப்பின்போது உருவான அதீத வெப்பம் மற்றும் ஒளியின் பாதையில் மனிதர்கள் தடையாக இருந்தபோது, அவர்களின் பின்னால் இருந்த சுவர்கள் வெளுத்துப்போயின. ஆனால் உடல் மறைத்த பகுதி மட்டும் பழைய நிறத்திலேயே நீடித்ததால், அவை நிரந்தர நிழல்களாகப் பதிவாகின.

யுரேனியம் 235 மற்றும் புளுட்டோனியம் 239 ஆகியவற்றால் உருவான காமா கதிர்வீச்சு ஒட்டுமொத்த நகரத்தையும் சாம்பலாக்கியது. வெடிப்பு மையத்திலிருந்து சற்று தொலைவில் இருந்த பகுதிகளில், இந்த நிழல்கள் இன்றும் அந்த கோரத் தாக்குதலின் சாட்சியாக மிஞ்சியிருக்கின்றன. அறிவியல்பூர்வமாகப் பார்த்தால், வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்ட தரைக்கும் சுவருக்கும் இடையே ஏற்பட்ட நிற மாற்றமே இந்த நிழல் உருவங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது என ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *