வேட்பாளர் அறிமுகத்தில் அதிரடி மாற்றம் செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய்

வேட்பாளர் அறிமுகத்தில் அதிரடி மாற்றம் செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் பிரம்மாண்டமான கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்து திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப நடைமுறைகள் மற்றும் சில தொகுதிகளில் நிலவும் இழுபறியே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த முக்கியமான அறிமுகக் கூட்டம் வரும் மார்ச் 29 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்களைத் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைக்க உள்ளார். கட்சியின் இந்த திடீர் மாற்றம் தொண்டர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *