சீட் ஒதுக்கீட்டில் அதிருப்தி தேர்தலில் போட்டியிட மாட்டாரா அண்ணாமலை

சீட் ஒதுக்கீட்டில் அதிருப்தி தேர்தலில் போட்டியிட மாட்டாரா அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியைக் கைப்பற்றுவதில் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சிட்டிங் எம்எல்ஏ வானதி ஏற்கனவே பணிகளைத் தொடங்கிவிட்ட நிலையில், கடந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி அண்ணாமலை அதே தொகுதியைக் கோருகிறார். இந்த அதிகாரப் போட்டியால் பாஜக மேலிடம் திணறி வருகிறது.

வளர்ந்து வரும் தொகுதிகளை விட்டுக்கொடுப்பதில் அதிருப்தி அடைந்த அண்ணாமலை, கட்சித் தலைமையிடம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். தனக்கு விருப்பமான தொகுதி கிடைக்காத பட்சத்தில், இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்க்கப் போவதாக அவர் மேலிடத்திற்குத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் முடிவு தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *