ஜெர்மனியின் சரிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் இந்திய இளைஞர்களின் அதிரடிப் படை

ஜெர்மனியின் சரிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் இந்திய இளைஞர்களின் அதிரடிப் படை

ஜெர்மனியில் நிலவி வரும் கடும் பணியாளர் பற்றாக்குறையைத் தீர்க்க இந்திய இளைஞர்கள் தற்போது பெரும் பக்கபலமாக உருவெடுத்துள்ளனர். அங்குள்ள இறைச்சிக் கடைகள், மெக்கானிக் ஷெட்டுகள் மற்றும் பேக்கரிகள் உள்ளூர் ஆட்கள் கிடைக்காமல் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட போது, இந்தியர்களின் வருகை அந்த வணிகங்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது. முதியவர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் இடைவெளியை நிரப்ப அந்நாட்டு அரசு இப்போது இந்தியர்களை அதிகம் நம்பியுள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் திறமையான பணியாளர்களுக்கான விசா வரம்பை ஜெர்மனி ஆண்டுக்கு 20,000-லிருந்து 90,000-ஆக அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்திய இளைஞர்களின் உழைப்பு இல்லையென்றால் தங்கள் தொழில் முடங்கியிருக்கும் என்று ஜெர்மன் தொழிலதிபர்கள் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். சிறந்த ஊதியம் மற்றும் எதிர்காலத்திற்காக ஜெர்மனி செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2024-ல் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *