இந்தியா வந்தடைந்தது 42 ஆயிரம் டன் எல்பிஜி ஏற்றிய பிரம்மாண்ட கப்பல் ஜக் வசந்த்

எரிபொருள் தட்டுப்பாட்டு அச்சத்திற்கு மத்தியில் 42 ஆயிரம் மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவுடன் ‘ஜக் வசந்த்’ கப்பல் குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்தது. ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு கிடைத்துள்ள இந்த மிகப்பெரிய எரிவாயு இருப்பு, நாட்டின் லட்சக்கணக்கான வீடுகளின் தேவையை பூர்த்தி செய்யும். விநியோகத்தை விரைவுபடுத்த ‘மிட்-சீ டிரான்ஸ்பர்’ தொழில்நுட்பம் மூலம் எரிவாயுவை இறக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியிலும் ஈரானின் சிறப்பு அனுமதியுடன் இக்கப்பல் வந்திருப்பது இந்தியாவின் ராஜதந்திர வெற்றிக்கு சான்றாகும். கண்ட்லா துறைமுகம் வழியாக வந்துள்ள இந்த எரிவாயு இறக்குமதி, உள்நாட்டு சந்தையில் தட்டுப்பாட்டை நீக்கி விலையை சீராக வைத்திருக்க உதவும். இதனால் வரும் நாட்களில் தங்குதடையின்றி சமையல் எரிவாயு விநியோகம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.