பிரதமர் மோடியின் முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக எரிபொருள் இருப்பு குறித்த அதிகாரப்பூர்வ விளக்கம்

பிரதமர் மோடியின் முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக எரிபொருள் இருப்பு குறித்த அதிகாரப்பூர்வ விளக்கம்

நாட்டின் எரிபொருள் இருப்பு மற்றும் விநியோகம் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு பெட்ரோலிய அமைச்சகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 41 நாடுகளிலிருந்து தடையின்றி கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவில் 60 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு உள்ளதோடு, அடுத்த இரண்டு மாதங்களுக்கான விநியோகமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் விலை உயர்ந்தாலும், இந்தியாவில் கூடுதல் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏதுமில்லை என்றும், தினமும் 50 லட்சத்திற்கும் அதிகமான சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. எரிபொருள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் அவசர நிலை குறித்த செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *