சாத்தூரில் நயினாரை வீழ்த்த ஸ்டாலின் போடும் மாஸ்டர் பிளான்! களம் இறங்கும் திமுகவின் முக்கிய புள்ளி

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த முறை திருநெல்வேலிக்கு பதிலாக சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமுதாய வாக்குகளை கணக்கிட்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரைத் தோற்கடிக்க முதல்வர் ஸ்டாலின் தீவிரமான வியூகம் வகுத்து வருகிறார். இதனால் சாத்தூர் தொகுதியில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நயினார் நாகேந்திரனை எதிர்கொள்ள அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அல்லது அவரது மகனை திமுக களமிறக்க வாய்ப்புள்ளது. சாத்தூர் தொகுதி ஏற்கனவே ராமச்சந்திரனின் கோட்டையாக இருந்ததால், அங்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாலினின் இந்த நேரடி ஸ்கெட்ச் நயினாரின் வெற்றி வாய்ப்புக்கு பெரும் சவாலாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.