மதுரையில் குப்பையில் வீசப்பட்ட தங்கச் சங்கிலியை மீட்டெடுத்து நேர்மை காட்டிய பெண் தூய்மைப் பணியாளர்
March 27, 2026

மதுரை தனலட்சுமி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் வனராஜாவின் மனைவி ராணி, தவறுதலாகத் தனது 3 சவரன் தங்கச் சங்கிலியைக் குப்பையுடன் சேர்த்து தூய்மைப் பணியாளரிடம் வழங்கினார். சங்கிலி காணாமல் போனதை அறிந்த தம்பதியினர், உடனடியாகத் தூய்மைப் பணியாளர் சுப்பம்மா மற்றும் மேற்பார்வையாளரின் உதவியுடன் குப்பைகளில் தீவிரமாகத் தேடினர்.
நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் தம்பதியினர் ஏமாற்றத்துடன் சென்ற நிலையில், சுப்பம்மா மட்டும் விடாமுயற்சியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கழிவுகளைப் பிரித்துத் தேடினார். இறுதியில் சங்கிலியைக் கண்டெடுத்த அவர், அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தார். சுப்பம்மாவின் இந்த உன்னதமான நேர்மையைப் பாராட்டி, அந்த தம்பதியினர் அவருக்குச் சால்வை அணிவித்துத் தங்களது நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்தனர்.