ரஜினிகாந்தை வியப்பில் ஆழ்த்திய அஸ்வத் மாரிமுத்து போயஸ் கார்டனில் நடந்த அந்த 1.45 மணி நேர மேஜிக்

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்து கதை சொன்ன சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஸ்வத்தின் எழுத்துத் திறனைப் பாராட்டிய ரஜினி அவரைத் தனது இல்லத்திற்கு அழைத்து சுமார் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் கதை கேட்டுள்ளார். அஸ்வத்தின் திரைக்கதை அமைப்பைக் கண்டு வியந்த ரஜினிகாந்த் வாட் எ ரைட்டிங் என மனதாரப் புகழ்ந்துள்ளார்.
ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவிருந்த இந்தக் கதையைக் கேட்டு ரஜினி திகைத்துப் போனதாக அஸ்வத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தலைவர் 173 படத்தின் வாய்ப்பு சிபி சக்ரவர்த்திக்குச் சென்றாலும் இளம் இயக்குநர்களை ரஜினிகாந்த் ஊக்குவிக்கும் விதம் கோலிவுட்டில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இவர்களது கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.