அயோத்தி ராமர் கோயிலில் சூரிய திலகம் காணக் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்

ராம நவமி விழாவை முன்னிட்டு அயோத்தியில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக ராமர் கோயில் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3:30 மணி முதல் நள்ளிரவு வரை இடைவிடாத தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி நகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கூடுதல் போலீஸ் படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இன்று நண்பகலில் ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அதிசய ‘சூரிய திலக்’ நிகழ்வு நடைபெற உள்ளது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் திரண்டுள்ளனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதுடன், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், நிழற்குடைகள் மற்றும் மருத்துவ வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொடர் விடுமுறையினால் உள்ளூர் மக்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.