சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனையில் 77 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல்
March 27, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னை அசோக் நகரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 77 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட இந்த நகைகள் தற்போது வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஈக்காட்டுதாங்கலில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த நகைகள் கொண்டு செல்ல முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தம் 21 வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டதில் ஒரு வாகனத்தில் மட்டும் முறையான அனுமதிச் சீட்டு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.