தமிழக காவல்துறை அதிகாரிகள் 10 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கி மத்திய அரசு அதிரடி உத்தரவு
March 27, 2026

தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் 10 மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குரூப்-1 தேர்வு மூலம் பணியில் சேர்ந்து, தங்களின் சிறப்பான பணிக்கால அடிப்படையில் இந்த உயரிய அங்கீகாரத்தை அவர்கள் பெற்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் துணை ஆணையர் மற்றும் எஸ்பி அந்தஸ்தில் பணியாற்றி வரும் இவர்களுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் எஸ்.அரவிந்த், என்.ஸ்டீபன் ஜேசுபாதம், பி.தங்கதுரை, எஸ்.எஸ்.மகேஷ்வரன், வி.ஆர்.ஸ்ரீநிவாசன், டாக்டர் கே.பிரபாகர், சி.சியாமளா தேவி, எம்.கிங்ஸ்லின், வி.சியாமளா தேவி மற்றும் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.