ராஜபாளையம் தொகுதி விவகாரத்தில் அதிருப்தியா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கௌதமி

ராஜபாளையம் தொகுதி விவகாரத்தில் அதிருப்தியா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கௌதமி

அதிமுக கூட்டணியில் தமமுகவிற்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டதால் நடிகை கௌதமி அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் பரவின. இபிஎஸ் அவருக்கு இந்த தொகுதியை உறுதி அளித்திருந்த நிலையில், ஜான் பாண்டியன் அங்கு போட்டியிடுவது இந்த யூகங்களுக்கு வலுசேர்த்தது. ஆனால், இந்த செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகளே என்று கௌதமி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

தாம் வருத்தத்தில் இருப்பதாக பரவும் செய்திகள் வேலையற்றவர்களின் வேலை என்று அவர் விமர்சித்துள்ளார். தற்போதைய சூழலில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதே தனது முதன்மையான நோக்கம் என்றும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *