ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு மாம்பழச் சின்னம் அன்புமணி வசம்

ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு மாம்பழச் சின்னம் அன்புமணி வசம்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வந்த ‘மாம்பழம்’ சின்னம் தொடர்பான சட்டப் போராட்டத்தில், தற்போது அன்புமணி தரப்பிற்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சின்னம் தொடர்பாக ஏதேனும் முறையீடு இருந்தால் தேர்தல் ஆணையத்தைத்தான் அணுக வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், மாம்பழச் சின்னம் முடக்கப்படாதது அன்புமணி தலைமையிலான பாமகவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதே சமயம், ராமதாஸ் தரப்பு அடுத்தகட்டமாகத் தேர்தல் ஆணையத்தை அணுகுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *