புதுச்சேரி தேர்தலில் தவெக கூட்டணி கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுச்சேரி தேர்தலில் தவெக கூட்டணி கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் தாக்கல் செய்த பொது சின்னம் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், தற்போது பொது சின்னம் ஒதுக்கீடு செய்ய முடியாது என தலைமை நீதிபதி அமர்வு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டதால், இந்தத் தேர்தலில் மனுதாரர் கட்சி வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். இருப்பினும், அடுத்த தேர்தலில் பொது சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *