விஜய் கொடுத்த அதிரடி புகாரால் பணிந்த பொன்ராஜ் எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்டு உருக்கம்

விஜய் கொடுத்த அதிரடி புகாரால் பணிந்த பொன்ராஜ் எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்டு உருக்கம்

தமிழக வெற்றிக் கழக பெண் தொண்டர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் டிஜிபி அலுவலகத்தில் நள்ளிரவில் புகார் அளித்தார். விஜய்யின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, சில மணிநேரங்களிலேயே பொன்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார். தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், எந்தப் பெண்ணையும் காயப்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் அவர் அந்தப் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

பெண்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் வகையில் பேசிய பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் தனது புகாரில் வலியுறுத்தியிருந்தார். மன்னிப்பு கேட்ட பிறகும் தமக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல்கள் வருவதாகவும், இது தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் பொன்ராஜ் தெரிவித்துள்ளார். பொன்ராஜின் மன்னிப்பை ஏற்று விஜய் தனது புகாரைத் திரும்பப் பெறுவாரா அல்லது சட்ட நடவடிக்கை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *