தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரும் புதின் பிறப்பித்த அதிரடி உத்தரவால் உலக சந்தையில் பதற்றம்

தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரும் புதின் பிறப்பித்த அதிரடி உத்தரவால் உலக சந்தையில் பதற்றம்

ரஷ்யாவின் நிழல் உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தவும் வரி ஏய்ப்பைத் தடுக்கவும் தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்ல அதிபர் விளாடிமிர் புதின் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். மே 1 முதல் தனிநபர்கள் 100 கிராமுக்கு மேல் தங்கக் கட்டிகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களுக்குத் தங்கம் மாற்றாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகின் முக்கிய தங்கம் உற்பத்தி நாடான ரஷ்யாவின் இந்த முடிவால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் வரத்து குறைந்து அதன் விலை பெருமளவு உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜனவரி மாதத்தில் மட்டும் ரஷ்யாவிலிருந்து சுமார் 13.2 பில்லியன் டாலர் ரொக்கம் வெளியேறியுள்ள நிலையில், மூலதனம் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க இந்த இரும்புக்கரம் கொண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தங்க சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *