பெரம்பூரில் பங்களா வாங்கி அதிரடி காட்டும் விஜய் தேர்தல் களத்தில் அடுத்த மூவ் என்ன

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சென்னை கொடுங்கையூர் அருகே உள்ள கண்ணதாசன் நகரில் அவர் ஒரு புதிய பங்களாவை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இல்லத்தில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள விஜய், இன்று புதன்கிழமை அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியல் களத்தில் ஐந்து முனைப் போட்டி நிலவும் சூழலில், தவெக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே புதுச்சேரிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், நட்சத்திர அந்தஸ்து கொண்ட பெரம்பூர் தொகுதியில் விஜய் களம் இறங்குவது உறுதியானால், அங்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்தும் விஜய்யின் இந்த புதிய வியூகம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.