வாழைப்பழத் தோலில் கால் வைத்தால் வழுக்கி விழுவது ஏன் தெரியுமா

வாழைப்பழத் தோலில் கால் வைத்தால் வழுக்கி விழுவது ஏன் தெரியுமா

வாழைப்பழத் தோலில் கால் வைக்கும்போது ஏன் மற்ற பழங்களை விட அதிகப்படியாக வழுக்குகிறது என்பது குறித்து ஜப்பானின் கிட்டசாடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளனர். வாழைப்பழத் தோலின் உட்புறத்தில் ‘பாலிசாக்கரைடு’ ஜெல் நிறைந்த சிறிய செல்கள் உள்ளன. நம் உடல் எடை அதன் மீது படும்போது அந்த செல்கள் உடைந்து ஒரு இயற்கையான மசகு போன்ற திரவத்தை வெளியிடுகிறது. இதுவே நாம் வழுக்கி விழுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ஆய்வுகளின்படி வாழைப்பழத் தோலின் உராய்வு குணகம் வெறும் 0.07 ஆகும் இது பனிக்கட்டியின் மீது நடப்பதை விட அதிக ஆபத்தானது. ஆப்பிள் அல்லது ஆரஞ்சு தோல்களில் இந்த வகை ஜெல் இல்லாததால் அவை வழுக்குவதில்லை. இந்த திரவத்தால் கால்கள் எதிர்பாராத வேகத்தில் நகர்வதால் மூளை சமநிலையை உணரும் முன்பே நாம் கீழே விழுந்து விடுகிறோம். எனவே விபத்துகளைத் தவிர்க்க வாழைப்பழத் தோல்களை பொது இடங்களில் வீசாமல் குப்பைத் தொட்டியில் போடுவது அவசியம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *