மார்ச் 31-க்குள் இந்த பணிகளை முடிக்காவிட்டால் காத்திருக்கிறது சிக்கல்

பான் கார்டு விண்ணப்பிக்கும் முறையில் வரும் ஏப்ரல் 1 முதல் புதிய மாற்றம் அமலுக்கு வருகிறது. புதிய விதிகளின்படி, பான் கார்டு பெற ஆதார் கார்டுடன் பிறப்புச் சான்றிதழ் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. ஆனால், மார்ச் 31, 2026-க்குள் விண்ணப்பிப்பவர்கள் வழக்கம்போல வெறும் ஆதார் கார்டை மட்டுமே கொண்டு எளிதாக விண்ணப்பிக்க முடியும். இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அதேபோல், வீட்டு உபயோக சிலிண்டர் பயனாளர்கள் அனைவரும் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகரிப்புடன் கூடிய கேஒய்சி (KYC) முறையை முடிப்பது அவசியமாகும். மத்திய அரசின் இந்த புதிய விதிமுறையின்படி, எரிவாயு விநியோகத்தில் தடையைத் தவிர்க்க இந்த நடைமுறையை மார்ச் 31, 2026-க்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கேஒய்சி பணிகளை நிறைவு செய்யாத பட்சத்தில், சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.