ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய நிதி விதிகள் பான் கார்டு மற்றும் வருமான வரி மாற்றங்கள் இதோ

ஏப்ரல் 1, 2026 முதல் இந்தியாவில் நிதிச் சார்ந்த பல்வேறு முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. பான் கார்டு விண்ணப்பிக்க இனி ஆதார் அட்டையுடன் பிறப்புச் சான்றிதழையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியில் ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யவும், ரூ.5 லட்சத்திற்கு மேல் வாகனம் வாங்கவும், ரூ.20 லட்சத்திற்கு மேலான சொத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு சமர்ப்பிப்பது இனி அவசியமாகும். ஹோட்டல் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவு செய்தாலும் பான் கார்டு விவரங்கள் கேட்கப்படும்.
வருமான வரி விதிகளின்படி, கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை விவரங்களை வருமான வரித்துறையிடம் சமர்ப்பிப்பது இனி கட்டாயமாகும். ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சியான சிபிடிசி (CBDC) அங்கீகரிக்கப்பட்ட பணப் பரிமாற்ற முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. வங்கிகள் தங்களின் ஏடிஎம் பணமெடுக்கும் வரம்பு மற்றும் கட்டண முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. உலகளாவிய எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக கேஸ் சிலிண்டர் விலையிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுவதால், இது பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.