திருப்பூரில் சொத்து தகராறால் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு கணவன் விபரீத முடிவு

திருப்பூர் டி.கே.டி மில் பகுதியில் குடும்பச் சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக, மனைவி சத்யாவை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு கணவர் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் குடும்பச் சொத்தில் உரிய பங்கு கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் இந்த கொடூர சம்பவத்தை அவர் நிகழ்த்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சத்யா உயிரிழந்ததைத் தொடர்ந்து, செந்தில்குமார் விஷம் குடித்து தூக்கிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டார்.
இந்த விபரீத முடிவுக்கு முன்னதாக உறவினர்களுக்கு வாட்ஸ்-ஆப் வீடியோ அனுப்பிய செந்தில்குமார், 15 பக்கங்கள் கொண்ட கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். தகவலறிந்து வந்த வீரபாண்டி போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோரை இழந்த 15 வயது சிறுமி தற்போது நிர்கதியாக நிற்கிறார். போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.