தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவதாக அதிமுக எம்பி இன்பதுரை பரபரப்பு புகார்

தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவதாக அதிமுக எம்பி இன்பதுரை பரபரப்பு புகார்

சேலம் மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு செல்போன்கள் வழங்கப்பட்டதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாக அதிமுக எம்பி இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளே இத்தகைய விதிமீறல்களுக்குத் துணையாக இருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டினார்.

சேலம் மட்டுமின்றி திருப்பூர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் இது போன்ற விதிமீறல்கள் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுங்கட்சியின் தலையீடு இதில் இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ள அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *