கிள்ளியூர் தொகுதியை காங்கிரஸிற்கு ஒதுக்குவதா அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் இடையே பயங்கர மோதல்

கிள்ளியூர் தொகுதியை காங்கிரஸிற்கு ஒதுக்குவதா அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் இடையே பயங்கர மோதல்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் இடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. இந்தத் தொகுதியை மீண்டும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸிற்கு ஒதுக்குவதா அல்லது திமுகவே போட்டியிடுவதா என்பது குறித்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது.

கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறையும் அவருக்கே ஆதரவளிப்பதாக ஒரு தரப்பும், திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என மறுதரப்பும் மோதிக்கொண்டன. அறிவாலயத்தின் வாசலிலேயே நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *