தங்கையை 84 முறை குத்திக் கொன்றுவிட்டு தாய்க்கு சர்ப்ரைஸ் கொடுக்க அழைத்த பொறியாளர் அண்ணன்

தங்கையை 84 முறை குத்திக் கொன்றுவிட்டு தாய்க்கு சர்ப்ரைஸ் கொடுக்க அழைத்த பொறியாளர் அண்ணன்

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் சமூக வலைதளத் தோழியை திருமணம் செய்ய குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஹிமாஷிகா என்ற தனது இரட்டை சகோதரியை 84 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் பொறியாளரான ஹர்திக். வேலை இழந்த நிலையில் இருந்த ஹர்திக், தனது தொழில் வாழ்க்கை மற்றும் காதல் விவகாரத்தில் குடும்பத்தினர் தலையிட்டதால் ஆத்திரமடைந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சகோதரியைக் கொன்ற பிறகு, ஹர்திக் தனது தாய் நீலிமாவை ‘சர்ப்ரைஸ்’ இருப்பதாகக் கூறி அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளைக் கண்டு தாய் அலறியபோது, அவர் மீதும் ஹர்திக் தாக்குதல் நடத்தியுள்ளார். படுகாயமடைந்த நீலிமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 24 மணி நேரத்திற்குள் ஹர்திக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *