அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் ஊழல் வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மனு

அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் ஊழல் வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மனு

தமிழக நகராட்சி நிர்வாகத் துறையில் சுமார் 2500 பணியிடங்களை நிரப்புவதில் 634 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாரில் அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுத்தவில்லை என அதிமுக எம்பி இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்படாததால், மனுதாரர் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த நீதிமன்ற அவமதிப்பு மனு அடுத்த வாரம் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக இது குறித்து விளக்கம் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *