தோனி கொடுத்த அந்த ஒரு அட்வைஸ் 14 கோடிக்கு ஏலம் போன பிரசாந்த் வீர் நெகிழ்ச்சி

ஐபிஎல் 2026 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 14.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் வீரர் பிரசாந்த் வீர் தோனியுடனான தனது சந்திப்பு குறித்து பகிர்ந்துள்ளார். முதல் சந்திப்பிலேயே தோனி கிரிக்கெட்டைத் தாண்டி ஐபிஎல் மூலம் கிடைத்த பணத்தை வீணாக்காமல் சேமித்து வைக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார். மகியின் இந்த எதார்த்தமான அட்வைஸ் தன்னை நெகிழ வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். பெரும் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டாலும் பணத்தை சரியாகக் கையாள தோனி வழிகாட்டியுள்ளார்.
அடுத்த ஜடேஜாவாக உருவெடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ஜடேஜாவின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல என்று கூறினார். ஜடேஜாவுடன் ஒப்பிடுவது தனக்கு அழுத்தத்தை தரும் என்பதால் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புவதாகத் தெரிவித்தார். எந்த வரிசையிலும் பேட்டிங் செய்யத் தயாராக இருக்கும் பிரசாந்த் சிஎஸ்கே அணியின் ஆதரவான சூழலில் தனது திறமையை நிரூபிக்க ஆர்வமாக உள்ளார்.