துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதலால் பற்றி எரிந்த எரிபொருள் டேங்க் மற்றும் விமான சேவைகள் பாதிப்பு
March 16, 2026

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எரிபொருள் சேமிப்பு டேங்க் மீது ட்ரோன் தாக்கியதில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பாதுகாப்பு கருதி அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது திருப்பி விடப்பட்டுள்ளன.
தீயணைப்பு வீரர்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற விமானம் நடுவழியில் திரும்பியது உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமை சீராகும் வரை பயணிகள் விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.