ஈரானில் பெய்யும் மர்மமான கருப்பு மழை மக்களிடையே பரவும் நோய் பீதி
March 16, 2026

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளில் வானத்திலிருந்து கருப்பு நிறத்தில் எண்ணெய் பிசுபிசுப்புடன் கூடிய மழை பெய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய போரின் காரணமாக எண்ணெய் வயல்களில் ஏற்பட்ட தீ மற்றும் வான்வழித் தாக்குதல்களால் வளிமண்டலத்தில் கலந்த நச்சுப் புகையே இந்த ‘கருப்பு மழைக்கு’ காரணமாகக் கூறப்படுகிறது. இந்த அசாதாரண நிகழ்வு அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்த மழையில் கலந்துள்ள நச்சு இரசாயனங்கள் நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறு மற்றும் தோல் நோய்களை உண்டாக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. காற்றில் உள்ள நுண் துகள்கள் மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், நீண்ட கால பாதிப்புகளைத் தவிர்க்க மக்கள் கவனமுடன் இருக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.