விமான நிலையத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை ஆணையர் அதிரடி கைது

விமான நிலையத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை ஆணையர் அதிரடி கைது

சென்னை விமான நிலையத்தில் 24 வயது இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோயம்புத்தூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை ஆணையர் செந்தில்வேலன் கைது செய்யப்பட்டார். கோவையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்த அவர், உடைமைகளை எடுக்கும் இடத்தில் வைத்து செல்பி எடுக்க வற்புறுத்தி ஆபாசமாகப் பேசியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், விமான நிலைய மகளிர் போலீசார் 59 வயதான செந்தில்வேலனை பிடித்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே ஒழுங்கீன நடவடிக்கையாக தற்காலிக பணிநீக்கத்தில் உள்ள அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு உயர் அதிகாரி ஒருவரின் இத்தகைய தரம் தாழ்ந்த செயல் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *