இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவிய டான்சிங் ஏவுகணைகள் போர் களத்தில் பெரும் பதற்றம்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவிய டான்சிங் ஏவுகணைகள் போர் களத்தில் பெரும் பதற்றம்

போரின் 16வது நாளில் ஈரான் முதல்முறையாக தனது சக்திவாய்ந்த ‘செஜில்’ அல்லது ‘டான்சிங் ஏவுகணையை’ பயன்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து இந்த மேம்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து எதிரிகளுக்கு எதிராக இத்தகைய ஏவுகணையை ஈரான் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

சுமார் 2,000 கி.மீ தூரம் வரை பாயும் திறன் கொண்ட இந்த ஏவுகணை 700 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லும். இது எதிரி நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றி துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. தற்போது நிலவி வரும் இந்த மோதலில் இதுவரை 2,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஈரானின் 15,000 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *