பெரியவர்கள் அவசியம் செலுத்த வேண்டிய 6 முக்கிய தடுப்பூசிகள் மூலம் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கலாம்

பெரியவர்கள் அவசியம் செலுத்த வேண்டிய 6 முக்கிய தடுப்பூசிகள் மூலம் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கலாம்

இந்தியாவில் மார்ச் 16 அன்று தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1995-ல் வாய்வழி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. தடுப்பூசி என்பது குழந்தைகளுக்கு மட்டுமேயானது என்ற பொதுவான கருத்தை மாற்றி, பெரியவர்களும் முதிர் வயதில் ஏற்படும் சுகாதார அபாயங்களைத் தவிர்க்க சில குறிப்பிட்ட தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். சிறுவயதில் போட்ட தடுப்பூசிகளின் வீரியம் காலப்போக்கில் குறையக்கூடும் என்பதே இதன் முக்கிய காரணமாகும்.

இன்ஃப்ளூயன்சா, நிமோகோக்கல், ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெச்பிவி போன்ற தடுப்பூசிகள் நிமோனியா மற்றும் கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட தீவிர நோய்களைத் தடுக்க உதவுகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசியும், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை டிடொனஸ் பூஸ்டர் தடுப்பூசியும் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. தொற்றுநோய்களுக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தயார்படுத்தவும், சமூக ஆரோக்கியத்தைப் பேணவும் சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஒரு வலுவான கேடயமாக அமைகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *