13 ஆண்டு கால வேதனையான போராட்டத்திற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் கௌரவமான விடைபெறுகிறார் ஹரிஷ் ரானா

13 ஆண்டு கால வேதனையான போராட்டத்திற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் கௌரவமான விடைபெறுகிறார் ஹரிஷ் ரானா

உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின்படி 13 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த 32 வயது ஹரிஷ் ரானாவிற்கு கருணைக்கொலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2013-ல் மாடியிலிருந்து விழுந்து மூளை கடுமையாக பாதிக்கப்பட்ட ஹரிஷின் கடைசி நிமிட உணர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் குடும்பத்தினர் கண்ணீருடன் அவருக்கு விடை கொடுக்கும் காட்சி காண்போரை உருக வைக்கிறது.

தற்போது ஹரிஷ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் செயற்கை உயிர் காக்கும் கருவிகள் படிப்படியாக அகற்றப்படும். எவ்வித உடல் ரீதியான வலியும் இன்றி இயற்கையான முறையில் அவர் தனது இறுதி மூச்சை சுவாசிக்க நீதிமன்றம் இந்த முக்கிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *